கேரள மழைவெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி 738 கோடியிலிருந்து, ரூ.1027 கோடியாக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் மே மாதம் 28-ம் தேதி தொடங்கியதில் இருந்து மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய பாதிப்புகளில் இதுவரை மொத்தம் 483 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 14 பேர் காணாமல்போய் உள்ளனர்.
தற்போது மழை ஓய்ந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. நிவாரண பணிகளில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்தது.
வெள்ள நிவாரண நிதி கேரள மாநிலத்துக்கு இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டது.
ஆகஸ்ட் 28-ம் தேதி வரை, கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்காக உலகமெங்கிலும் இருந்து 738 கோடி ரூபாய் நிவாரண நிதி வந்திருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.
இந்நிலையில் அந்த நிவாரண நிதியானது தற்பொழுது வரை 1027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.




