Follow Us:
Home/செய்திகள்/அமெரிக்க நிறுவனம் வித்தியாசமான வடிவத்தில் ராக்கெட் அனுப்பியது
செய்திகள்

அமெரிக்க நிறுவனம் வித்தியாசமான வடிவத்தில் ராக்கெட் அனுப்பியது

Tuesday, August 25, 2026iCineMass Editorial
அமெரிக்க நிறுவனம் வித்தியாசமான வடிவத்தில் ராக்கெட் அனுப்பியது

அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று தனியார் நிறுவனம் நியூ ஷேஃபர்ட் 2.0 என்று ராக்கெட்டை விண்ணில் ஏவி இருக்கிறது.

இந்த நியூ ஷேஃபர்ட் 2.0 ராக்கெட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், இது தற்போது நாம் பார்க்கும் ராக்கெட்டுகள் போல இருக்காது. இதன் முன்பக்கம், வடிவம் எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.

இந்த நியூ ஷேஃபர்ட் 2.0 ராக்கெட் உருவாக்கப்பட்டு இருப்பதாக, ப்ளூ ஆர்ஜின் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுவரை இந்த மாதிரி வடிவத்தில் ராக்கெட் எதுவும் உருவாக்கவில்லை என்றுள்ளனர். இதை வைத்து எளிதாக வேற்று கிரகங்களுக்கு செல்ல முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக பூமியை விட்டு வெளியே செல்லும் ராக்கெட்டுகள் திரும்பி வராது. அப்படி வந்தால், பூமியின் வளிமண்டலம் காரணமாக அது தீப்பிடித்து சாம்பலாகும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தீயில் சாம்பலாகாமல் மீண்டும் பூமிக்கு திரும்ப வரும் ராக்கெட்டுகளை வடிவமைத்தது.