தமிழக அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 வருடங்கள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




