Follow Us:
Home/செய்திகள்/துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து - தமிழகம் முழு அடைப்பு போராட்டம்
செய்திகள்

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து - தமிழகம் முழு அடைப்பு போராட்டம்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து -  தமிழகம் முழு அடைப்பு போராட்டம்

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து - தமிழகம் முழு அடைப்பு போராட்டம்

தமிழகம் முழுவதும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து, திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரி அமைப்புகள், உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளனர். மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையனும் இன்று கடையடைப்பு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என அறிவித்துள்ளது. எனவே சில தொடர்புடைய கட்சி அமைப்புகளின் கீழ் வரும் பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை.

தமிழகத்திற்கு வரும் பிறமாநிலங்களிலிருந்து பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.