கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றார்.
கடந்த மே 12ம் தேதி கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் (15.05.2018) நடைபெற்றது.
தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. அடுத்தபடியாக காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம் 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன, சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளன.
பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆளுநர் வஜுபாய் வாலா , எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்று, மேலும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என்றனர்.
ஆளுநரின் அழைப்பையடுத்து ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வராக பொறுப்பு எற்ற எடியூரப்பா முதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்து இருக்கிறார்.




