கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் 2, நாளை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில்
இன்று இரவு முதலே பிக்பாஸ் போட்டியாளர்கள், பிக்பாஸ் வீட்டில் சென்று வாழத் தொடங்கி அரம்பித்துவிடுவார்கள்.
கமல்ஹாசன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு, போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் அனுப்பி வைப்பார். இதற்கான பிரம்மாண்ட விழா இன்று நடைபெற இருக்கிறது.
விஜய் டிவியில் நாளை ஒளிபரப்பாகும் தொடக்க விழாவிற்கான ஷூட்டிங் இன்றே நடந்துவிடும். போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டில் இன்று இரவு முதலே வாழத் தொடங்கி விடுவார்கள்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும். கடந்த ஆண்டு தமிழ் மொழியிலும் அறிமுகமான இந்த நிகழ்ச்சி மக்கள் அனைவரையும் தொலைக்காட்சி முன்பு கட்டிப்போட்டு வைத்திருந்தது.
பிக் பாஸ் சீசன் 2 தொடங்குவதற்கு முன்பே, போட்டியாளர்கள் தங்க இருக்கும் வீடு பற்றிய சில விவரங்களை பார்ப்போம்...!
பிக் பாஸ் சீசன் 2 விலும், நடிகர் கமல் ஹாசன் தான் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த முறை 16 போட்டியாளர்கள், 64 கேமராக்கள், 100 நாட்கள் என்ற தகம்வலே அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
பிக் பாஸ் சீசன் 1-ல் வெறும் 30 கேமராக்கள் மட்டுமே சுற்றியிருந்தது. குறைந்த அளவிலான கேமரா இருக்கும்போதே பலரின் முகத்திரை கிழிந்தது, இந்த முறை 64 கேமராக்கள் என்றால் என்னவெல்லாம் சிக்குமோ? யாரெல்லாம் துயரத்தை அனுபவிக்கப் போகிறார்களோ என்று பொருத்திருந்தாம் பார்ப்போம்.
பிக் பாஸ் சீசன் 2 வீடு அமைந்துள்ள பகுதியில், கதவு திறந்து உள்ளே காலடி எடுத்து வைத்தவுடன், பச்சைப்பசேலென புல்வெளி. வலது பக்கம் நீச்சல் குளம், இடது புறம் இருக்கைகளும் சோபாவும் மற்றும் ஜிம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முறை பிக் பாஸ் சீசன் 2 வீட்டிற்குள் புதிதாக ஒரு ஜெயில் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்து வீட்டின் கண்ணாடி கதவைத் திறந்து உள்ளே சென்றால், கண்ணுக்கு முன்னால் தென்படுகிறது சமையல் அறை.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் தனித்தனியே பெட்ரூம்.
பெண்கள் அறையை பிங்க் கலரில் பெயிண்ட் மற்றும் வண்ணத்துப் பூச்சி ஸ்டிக்கர்கள் கொண்டு அலங்கரித்துள்ளனர்.
கடந்த பிக் பாஸ் சீசனில் ஹாலில் பெரிய நீல நிற சோபா இருந்தது. இந்த முறை அதனை மாற்றி மஞ்சள் நிறத்திலான சோபாவை பொருத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு இருந்த கன்ஃபஷன் அறை செட் அப்பை முற்றிலுமாக இந்த முறை மாற்றியுள்ளனர். பேங்க் லாக்கருக்குள் செல்வது போன்ற கதவுகள், உள்ளே சென்றால் கண்களுக்கு முன் மின்னும் கற்கள் பொருத்தப்பட்டுள்ள சோபா.
ஒரே ஆள் உட்காரும் அளவிற்கு உள்ள அந்த சோபா சிம்மாசனம் போலக் காட்சியளிக்கிறது.
பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நாளை தொடங்குவதற்கு முன்பே வீட்டை பற்றி சில தகவல் பார்த்தோம்.




