Follow Us:
Home/செய்திகள்/கேரளாவுக்கு இதுவரை நிவாரணமாக ரூ.738 கோடி நிதி திரண்டது - பினராயி விஜயன் தகவல்
செய்திகள்

கேரளாவுக்கு இதுவரை நிவாரணமாக ரூ.738 கோடி நிதி திரண்டது - பினராயி விஜயன் தகவல்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
கேரளாவுக்கு இதுவரை நிவாரணமாக ரூ.738 கோடி நிதி திரண்டது - பினராயி விஜயன் தகவல்

கேரள முதல்வர் பினராயி விஜயன் உலகமெங்கிலும் இருந்து கேரளாவிற்கு இதுவரை 738 கோடி நிவாரண நிதி வந்திருப்பதாக சிறப்பு சட்டசபை கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவு இப்போது ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கிலும் சிக்கி 483 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மாயமாகி உள்ளனர்.

தற்போது மழை ஓய்ந்து, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான கேரளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. நிவாரண பணிகளில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் கேரளாவில் நேற்று சட்டசபை சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 28-ம் தேதி வரை கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்காக உலகமெங்கிலும் இருந்து 738 கோடி ரூபாய் நிவாரண நிதி வந்திருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

மேலும் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரழிவு கேரளா பேரழிவைக் கண்டுள்ளது. கேரளாவில் 5700 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இன்னும் 59,200 பேர் நிவாரண முகாம்களில் தான் இருக்கிறார்கள்.

இதனை சரி செய்ய கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என கூறினார்.