தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை டெண்டரை உறவினர்களுக்கு ஒதுக்கியது தொடர்பாக தி.மு.க எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க எம்.பி. ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, லஞ்ச ஒழிப்புத்துறை முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் விசாரணை உண்மையாக நடைபெறாது எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் வழக்கு ஆவணங்களை, ஒரு வாரத்தில் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும்.
இதில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார்.




