3-வது டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, தொடரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது.
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 329 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் விராட் கோஹ்லி 97, ரஹானே 81 ரன்கள் அடித்தனர். ஆண்டர்சன், பிராட், வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 161 ரன்களுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பாண்டியா ஐந்து விக்கெட்கள் எடுத்தார்.
2-வது இன்னிங்க்சை இந்தியா 168 ரன்கள் முன்னிலையோடு துவக்கியது. விராட் கோஹ்லி 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி அபாரமாக பேட் செய்து சதம் அடித்தார். இது இவரது 23வது டெஸ்ட் சதம்.
இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்லேர் செய்தது.
இதன் மூலம் வெற்றி பெற இங்கிலாந்துக்கு 521 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்திருந்தது.
நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் 311 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது இங்கிலாந்து.
ஆட்டத்தின் கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கி 17 பந்துகள் மட்டுமே வீசப்பட்டது. அதற்குள் 10-வது விக்கெட்டை இழந்து தோல்வி அடைந்தது இங்கிலாந்து. இதன்மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 2 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.




