Follow Us:
Home/விளையா‌ட்டு/பஞ்சாப் அணியை பந்தாடியது - பெங்களூர் அணி
விளையா‌ட்டு

பஞ்சாப் அணியை பந்தாடியது - பெங்களூர் அணி

Tuesday, August 25, 2026iCineMass Editorial
பஞ்சாப்  அணியை பந்தாடியது - பெங்களூர் அணி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பந்தாடியது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்த நிலையில், 21 ரன்கள் சேர்த்திருந்த கே.எல்.ராகுல் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் திணறிக் கொண்டிருந்த கெயிலும், அதே ஓவரில் ஆட்டமிழந்தார். கெயில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 26 ரன் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். பெங்களூர் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் பஞ்சாப் அணியை பஞ்சராக்கியது.

இதனால் பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல அவுட்டானது. உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், சிராஜ், சாஹல், கிராண்ட்ஹோம், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பெங்களூர் அணி 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பார்த்தீவ் பட்டேல் மற்றும் விராத் கோஹ்லி அதிரடியாக விளையாடி, வெற்றிக்கு தேவையான ரன்களை விக்கெட் இழப்பின்றி 8.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்தனர்.

இதனால் பெங்களூர் அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாடத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி 48 ரன்களும், பார்த்தீவ் பட்டேல் 40 ரன்களும் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி ரன் ரேட் அதிகரித்துள்ளது.

பெங்களூர் அணி அடுத்து 2 போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது !