Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/விஜய் சேதுபதி - 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
சி‌னிமா செ‌ய்‌தி

விஜய் சேதுபதி - 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Tuesday, August 25, 2026iCineMass Editorial
விஜய் சேதுபதி - 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஜய் சேதுபதி, தியாகராஜ குமாராஜா கூட்டணியில் வெளியாக உள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

வித்தியசமான கதை களத்தை தேர்ந்தெடுத்த நடித்து வருபவர் விஜய் சேதுபதி, இந்த படத்தில் முதன் முறையாக திருநங்கை வேடத்தை ஏற்று சில்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த படத்தில் இவரின் லேடி கெட்டப்பை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி ஆகியோரின் கதாபாத்திர தோற்றம் வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



விஜய் சேதுபதி - 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - iCineMass.Com