Follow Us:
Home/சி‌னிமா செ‌ய்‌தி/விஜய் சேதுபதி - ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?
சி‌னிமா செ‌ய்‌தி

விஜய் சேதுபதி - ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?

Tuesday, August 25, 2026iCineMass Editorial
விஜய் சேதுபதி - ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசை. இப்படம் மூலம் ரஜினிக்கு இசையமைக்க வேண்டும் என்ற அனிருத்தின் ஆசை நிறைவேறிவிட்டது என்று கூட கூறலாம்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார் என்பது ஒரு ஸ்பெஷல் விஷயம்.

இதுபற்றி சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில்:-

இப்படத்தில் கதை கூட எனக்கு தெரியாது, திரையுலகில் ஒருசிலரை நான் நம்புவேன், அவர்களில் கார்த்திக் சுப்புராஜ் ஒருவர். கார்த்திக் சுப்புராஜுக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

மேலும் 40 வருடங்களுக்கும் மேல் ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு நடித்து வருகிறார் ரஜினி. அது சுலபமான காரியம் அல்ல. எப்படி பேசினால், நடித்தால், நின்றால் ரசிகர்களுக்கு பிடிக்கும். வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என அனைத்தையும் கணித்து அவர் இத்தனை வருடங்களாக ரசிகர்களை தன் பிடியில் வைத்திருக்கிறார்.

எனவே அதை கவனிக்கவே இந்த படத்தில் நடிக்கிறேன். கண்டிப்பாக அவருடன் நடிப்பது எனக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.