விஜய் 62 படத்தின் முக்கிய காட்சி வீடியோ கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. இவர்கள் கூட்டணியில் ரிலீஸான 'கத்தி', 'துப்பாக்கி' இரண்டு படங்களும் ஏற்கெனவே ஹிட் அடித்ததால், மூன்றாவது படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கின்றனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விஜய் 62. இந்த படத்திற்க்கு இன்னும் பெயரிடாவில்லை.
இந்நிலையில், தற்போது இந்தப் படம்பற்றிய வைரல் வீடியோ ஒன்று இணையத்தில் பரவிவருகிறது./p>
இந்த படம்குறித்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் எதுவும் இன்னும் வெளிவராத நிலையில், இந்த வீடியோ விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
விஜய் இளைஞர்களுடன் சேர்ந்து பைக்கில் ஊர்வலமாக செல்லும் காட்சியை சென்னையில் உள்ள கல்லூரி அருகே இரவில் படமாக்கப்பட்டது. அந்த காட்சி வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.




