விஜய் சேதுபதி படத்தில், ராக்ஸ்டார் ரமணியம்மாள் ஒரு குத்து பாடலை பாடியுள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் "ஜுங்கா". இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார்.
இப்படத்தை கோகுல் இயக்குகிறார், இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திற்கிறார்.
கோகுல் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் இது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" திரைப்படம் வெளியாகி செம ஹிட் கொடுத்துள்ளார்கள்.
தற்போது படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் வரும் ஒரு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்ற ராக்ஸ்டார் ரமணியம்மாளை பாட வைத்திருக்கிறார்.




