தமிழக பாக்ஸ் ஆபீஸில் 27 ஆண்டுகள் கழித்து நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம், ரஜினியின் பேட்டையை அடிச்சி துக்கி வசூலில் முதலிடம் பிடித்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் கடந்த 10-ம் தேதி ஒரே நாளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின.
பொங்கல் பண்டிகைக்கு முன்னராகவே வெளியானாலும் இரு படங்களுக்கும் ரசிகர்கள் அளித்த ஆதரவால் அரங்குகள் அதிர்ந்து வருகின்றது.
ரஜினியின் படத்துடன் மோதினால் விஸ்வாசம் என்னவாகும் என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் தமிழகத்தில் விஸ்வாசம் பேட்ட படத்தை வசூலில் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
இந்த நிலையில் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் படம் ரிலீஸான அன்று விஸ்வாசம் முதலிடத்திலும், பேட்ட இரண்டாவது இடத்திலும் இருந்தது. தற்போதும் தமிழகம், கேரளாவில் விஸ்வாசம் பேட்ட படத்தை விட நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம், பேட்டையை அடிச்சி துக்கி வசூலில் முதலிடம் பிடித்துள்ளது. 1992-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் தேவர் மகன் படம், ரஜினியின் பாண்டியன் படத்தை வசூலில் முந்தியது. அதன் பின்னர் கடந்த 27 ஆண்டுகளில் ரஜினி படத்துடன் வெளியான ஒரு படம் கூட அவரது படத்தின் வசூலை தமிழகத்தில் மிஞ்சியது இல்லை.
அந்த சாதனையை நடிகர் அஜீத்தின் விஸ்வாசம் 27 ஆண்டுகள் கழித்து தகர்த்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெளிநாடுகளில் ‘பேட்ட’ அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் ‘விஸ்வாசம்’ வெளியாகவில்லை என்பதால் மொத்த வசூலில் அஜீத் பட வசூலைவிட சிறிய அளவில் ரஜினி படம் முன்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.




