சூப்பர் டீலக்ஸ் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விஜய் சேதுபதியின் டான்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்' என்ற படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை ‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடிக்கிறார்.
மேலும் விஜய்சேதுபதியுடன் ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விஜய் சேதுபதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அன்று ஒரு நாள் ஷில்பா உடன் Director தியாகராஜன்குமாரராஜா 😍👍🏻 @itisthatis #SuperDeluxe pic.twitter.com/bqV72yB9DA
— VijaySethupathi (@VijaySethuOffl) October 27, 2018
அதில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்க அவரது அருகில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் நிற்கிறார். நடனம் ஆட சொல்லிக் கொடுக்கும் வீடியோ ‘அன்று ஒரு நாள் ஷில்பா உடன் Director தியாகராஜன்குமாரராஜா’ என்று வீடியோவை ட்வீட் செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.




